காரைக்குடி ரோடு ஷோ: ரத்து செய்தார் அமித்ஷா
- பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை, கோவை மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.
இதற்கிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.
மதுரைக்கு நாளை பிற்பகல் 3.05 மணிக்கு வருகை தரும் அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதால் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல், மதுரையில் 12-ம் தேதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தபிறகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் நிகழ்வையும் ரத்து செய்துள்ளார் அமித்ஷா.