தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- என்டிஏ கூட்டணியின் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம்

Published On 2024-07-04 16:54 GMT   |   Update On 2024-07-04 16:54 GMT
  • பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
  • அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார்.

அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண் வாக்காளர்களை குறிவைத்து சவுமியா அன்புமணி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற பாமகவுக்கு வாக்களிக்குமாறு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் பாமக வெற்றிபெறும். ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட இது முக்கியமான தேர்தல் என ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பல தேர்தலை சந்தித்துள்ளோம், மாற வேண்டியது நாம்தான் என ரவி பச்சைமுத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News