அரியலூர் பட்டாசு ஆலை விபத்து- உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
- சுற்றுவட்டாரங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
- வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திருமானூரை சேர்ந்தவர் அருண். இவருக்கு விரகாலூர் கிராமத்தில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது.
அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
அப்போது, அங்கு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 9 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறவித்துள்ளார்.
அதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிவாரண பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் சிவசங்கர், கணேசன் ஆகியோரை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.