தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான புதூர் அப்பு மீது குண்டாஸ்

Published On 2024-10-13 01:15 GMT   |   Update On 2024-10-13 01:15 GMT
  • திருவேங்கடம் மட்டும் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழந்தார்.
  • குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவுடி திருவேங்கடம் மட்டும் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கைதான 25 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதே வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு கடந்த மாதம் 21 ஆம் தேதி டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ளார். ஏற்கனவே 25 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் ரவுடி அப்பு மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரபல ரவுடி சம்போ செந்தில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News