தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி சம்போ செந்தில் சிக்காமல் தப்பித்து வருவது எப்படி?- அதிர்ச்சி தகவல்

Published On 2024-07-27 10:02 GMT   |   Update On 2024-07-27 11:32 GMT
  • மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • சம்போ செந்திலுடன் தொடர்பு கொண்ட நபர்களின் முழு விவரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி சம்போ செந்திலை 10 தனிப்படைகள் அமைத்து தேடி வரும் போலீஸார் சம்போ செந்தில் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து எப்படி? என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள சம்போ செந்திலின் கூட்டாளிகள் அவருடன் பேசுவதற்காக பிரத்யேக செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும், கூட்டாளியின் பிரத்யேக செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் சம்போ செந்தில், அவர்களின் சொந்த மொபைல் மூலம் விரும்பும் நபருக்கு போன் செய்து லவுடு ஸ்பீக்கரில் பேசுவதும் தெரிய வந்தது.

இப்படி பேசினால் சம்போ செந்தில் யாருடன் தொடர்பு கொள்கிறார் என்ற விவரங்களை பெற இயலாது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

வி.பி.என். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே தனது கூட்டாளிகளுடன் சம்போ செந்தில் பேசி வருவதும் விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

தினந்தோறும் மதிய வேலைக்கு பிறகே கூட்டாளிகளுடன் பேசி வரும் சம்போ செந்தில் வெளிநாட்டில் இருந்து கொண்டு அந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்றாற்போல் சம்போ செந்தில் பேசுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம், டெலிகிராம் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி சம்போ செந்திலுடன் தொடர்பு கொண்ட நபர்களின் முழு விவரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர்.

Tags:    

Similar News