தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.. ராகுலுக்கு பறந்த கடிதம்..?

Published On 2024-09-19 16:30 GMT   |   Update On 2024-09-19 16:30 GMT
  • ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம்.
  • புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதி இருக்கிறார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், "பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும். புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார்."

"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை என்றும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News