தமிழ்நாடு (Tamil Nadu)

அக்டோபர் 2ல் த.வெ.க மாநாடு பந்தலுக்கான பூமி பூஜை

Published On 2024-09-30 12:07 GMT   |   Update On 2024-09-30 12:07 GMT
  • தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.
  • ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குறைந்தது 4 லட்சம் பேரை மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வீட்டிலிருந்து புறப்படும் தமிழக வெற்றிக் கழக தொண்டன் மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வரை உள்ள சவால்களை சமாளிப்பது குறித்து விஜய் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் பதிவெண், இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகத்தை முன்கூட்டியே கட்சி தலைமைக்கு அனுப்ப விஜய் கட்டகளை விடுத்துள்ளார்.

இதுவரை நூற்றுக்கணக்கான வானங்களின் ஆவணங்கள் விஜய் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவை விஜய் உருவாக்கி உள்ளார்.

மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வானங்களுக்கு யாரேனும் தடை ஏற்படுத்தினாலோ, வாகனங்கள் பிரச்சினையில் சிக்கினாலோ அதை தீர்க்க தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், குறைந்தது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும் என கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதை காவல்துறையிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை வழங்க தனியாக கோரிக்கை விடுக்கவும் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.

மேலும், மாநாடு மேடையில் விஜய்யுடன், அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அமர வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் வெள்ளை நிற ஆணை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News