தமிழ்நாடு

குன்னூர் காட்டேரி பூங்காவுக்கு பிபின் ராவத் பெயர் சூட்ட முடிவு

Published On 2022-07-22 04:38 GMT   |   Update On 2022-07-22 04:38 GMT
  • ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தின் அருகே காட்டேரி பூங்கா உள்ளது.
  • ரன்னிமேடு ரெயில் நிலையத்திற்கு முப்படைத்தளபதி பெயர் சூட்டுவது தொடர்பாக ரெயில்வே துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முப்படைத்தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தின் அருகே காட்டேரி பூங்கா உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவுக்கு பிபின் ராவத்தின் பெயர் சூட்ட வேண்டும் என்று வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.

தற்போது இந்த கடிதமானது தோட்டக்கலை இணை இயக்குனருக்கு பரிசீலனைக்காக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பூங்கா மற்றும் ரன்னிமேடு ரெயில் நிலையத்திற்கு முப்படைத்தளபதி பிபின் ராவத் பெயர் சூட்ட கேட்டிருந்தார்.

அதன்படி மாநில தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பூங்காவுக்கு மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் பெயர் சூட்டுவதற்கு மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு காட்டேரி பூங்காவுக்கு முப்படை தளபதி பிபின் ராவத் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரன்னிமேடு ரெயில் நிலையத்திற்கு முப்படைத்தளபதி பெயர் சூட்டுவது தொடர்பாக ரெயில்வே துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News