தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டல்- பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

Published On 2024-02-08 13:29 GMT   |   Update On 2024-02-08 13:29 GMT
  • பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை.
  • பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அறிவுரை.

சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே

கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், மிரட்டல் விடுத்த நபர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் அச்சத்தால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், " காவல் துறையினர் உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News