தமிழ்நாடு (Tamil Nadu)

இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூ செடி

ஆற்றூர் அருகே இரவில் பூக்கும் பிரம்ம கமலம் செடி

Published On 2022-07-26 04:59 GMT   |   Update On 2022-07-26 04:59 GMT
  • பிரம்ம கமலம் கள்ளி செடி வகையை சேர்ந்த அரிய வகை செடி.
  • ஆண்டுக்கு ஒரு முறை ஜூன், ஜூலை மாதங்களில் தான் பூக்கும் அரிய வகை செடி.

திருவட்டார்:

ஆற்றூர் அருகே மாநில விவசாய பிரிவு துணைத்தலைவர் ஆற்றூர் குமார் வீட்டில் கள்ளி செடி வகையை சேர்ந்த பிரம்ம கமலம் என்னும் அரிய வகை செடி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் பூதப்பாண்டி மலை அடிவாரத்தில் இருந்து கொண்டுவந்து நட்டு வைத்தார். இது இமயமலை அடிவாரத்தில்தான் அதிகம் கிடைக்கும். இந்த செடியின் இலையை தான் நடவேண்டும் மற்ற செடிகள் வேர், கம்பு போன்றவைகளை நடவேண்டும். இதன் இலையின் விளிம்பில் இருந்துதான் பூ வரும்.

இது ஆண்டுக்கு ஒரு முறை ஜூன், ஜூலை மாதங்களில் தான் பூக்கும் அரியவகை செடி. இரவு 8 மணிக்கு மேல்தான் பூ விரிய தொடங்கும். இரவு 12 மணிக்கு முழுதாக பூ விரியும் அதிகாலை 5 மணிக்கு முழுவதும் உதிர்ந்து விடும். நல்ல வாசனை உடையது. இதனால் இது இரவின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பிரம்மனுக்கு படைப்பதற்கு உகந்த பூ இதுவென்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News