கடலூர் அருகே பரபரப்பு: காட்டுப்பன்றி கடித்து போலீஸ்காரர் படுகாயம்
- நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.
- காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் அடுத்த சின்ன தானங்குப்பம் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 28). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வருகின்றார்.
நேற்று மணிவண்ணன் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது நிலத்திற்கு விவசாய பணி மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணிவண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.