தமிழ்நாடு

உங்களால் முடியுமா....?- மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு கேள்வி

Published On 2023-09-09 09:41 GMT   |   Update On 2023-09-09 09:41 GMT
  • சனாதன தர்மத்தை நம்பி பின்பற்றினால், தி.மு.க.விற்கோ அதன் கூட்டணிக்கோ வாக்களிக்காதீர்கள், அதை ஒழிக்க வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள்.
  • முதல்வர் குடும்பத்தை இனி கோவில்களுக்கு அருகில் பார்க்க முடியாது என்று நம்புகிறேன்.

சனாதன சர்ச்சை நீடித்து வரும் நிலையில் தி.மு.க.வின் விமர்சனம் பற்றி நடிகை குஷ்பு கூறியதாவது:-

ஒரு நம்பிக்கையை, தவறாகப் பயன்படுத்தி துன்புறுத்தி இன்பம் காண்பவர்கள் அந்த நம்பிக்கை உள்ளவர்கள், தங்களுக்கு வாக்களித்து, தாங்கள் வெற்றி பெறவில்லை என்று வெளிப்படையாகச் சொல்லும்படி நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்.

டெங்கு, கோவிட், தொழுநோய், புற்றுநோய் என்று சொல்லி தைரியத்தை காட்டும்போது, சனாதன தர்மத்தை நம்பி பின்பற்றினால், தி.மு.க.விற்கோ அதன் கூட்டணிக்கோ வாக்களிக்காதீர்கள், அதை ஒழிக்க வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள்.

மேலும் முதல்வர் குடும்பத்தை இனி கோவில்களுக்கு அருகில் பார்க்க முடியாது என்று நம்புகிறேன். மு.க.ஸ்டாலின் அவர்களே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களால் முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News