சூரியனார் கோவில் மடத்தை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்த ஆதீனம்
- தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் சூரியனார்கோவில் ஆதீனமும் ஒன்றாகும்.
- சூரியனார்கோவில் ஆதீனன் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார்கோவில் ஆதீனம் அமைந்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த சூரியனார்கோவில் ஆதீனத்தின் 28-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (வயது 54) பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்ற பெண்ணை கடந்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.
ஆதீனகர்த்தராக பதவியில் இருக்கும் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடாது என ஆன்மீகவாதிகள் மத்தியில் இதற்கு கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், திருமணமானவர்கள் ஆதீனமாக இருக்கக்கூடாது எனக்கூறி மகாலிங்க சுவாமியை சூரியனார்கோவில் ஆதீனத்தை விட்டு வெளியேற்றி மடத்திற்கு பக்தர்கள் பூட்டு போட்டனர்.
இதனையடுத்து, கும்பகோணம் சூரியனார் கோயில் மடம் மற்றும் சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஆதீனம் ஒப்படைத்தார்