தமிழ்நாடு

அரசு பள்ளியில் மாணவர்களை கால் பிடித்துவிட வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

Published On 2024-11-22 13:39 GMT   |   Update On 2024-11-22 13:39 GMT
  • ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தல்.
  • ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் வீரகனூர் அருகே உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியில் கணித ஆசிரியராக ஜெயபிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர், மாணவர்களை கால் அழுத்திவிட சொல்லி ஓய்வெடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், கல்வி ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், மாணவர்களை கால் அழுத்த சொல்லி ஓய்வெடுத்த ஆசிரியர் ஜெயபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாணவர்களை கால் அழுத்த சொல்லி, ஆசிரியர் தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News