தமிழ்நாடு

2025ம் ஆண்டின் பொது விடுமுறைகள்..! தமிழக அரசு அறிவிப்பு

Published On 2024-11-22 11:08 GMT   |   Update On 2024-11-22 11:08 GMT
  • குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.
  • அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2025ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என அரசு விடுமுறைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக் கிழமைகளுடன்" பின்வரும் நாட்களும், 2025- ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.

அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் அக்டோபரில் தலா 4 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



 


Tags:    

Similar News