தமிழ்நாடு
ஊறுகாய் போடுபவர் அமைச்சர் ஆக கூடாதா? - நிர்மலா சீதாராமன்
- இந்தியாவில் பசுமை புரட்சி, வெண்மைப் புரட்சி போலவே தற்போது டிஜிட்டல் புரட்சி நடந்துள்ளது.
- என்னை பொறுத்தவரை ஊறுகாய் போடுவது இழிவானது இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று "மகளிர் எழுச்சி" என்னும் தலைப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பசுமை புரட்சி, வெண்மைப் புரட்சி போலவே தற்போது டிஜிட்டல் புரட்சி நடந்துள்ளது. இதனால் ஜி.எஸ்.டி. வரிகள் உட்பட அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது. இந்தியாவில் நடந்துள்ள டிஜிட்டல் புரட்சியை கண்டு உலக நாடுகளே ஆச்சரியமடைந்துள்ளது.
ஊறுகாய் போட்டுக் கொண்டு இருந்தவரை நிதியமைச்சராக ஆக்கியுள்ளார் என்று என்னை விமர்சிப்பார்கள். என்னை பொறுத்தவரை ஊறுகாய் போடுவதும் இழிவானது இல்லை, மக்களுக்காக சேவை செய்வதும் இழிவானதும் இல்லை" என்று தெரிவித்தார்.