அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்க கோரிய வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
- இந்த வழக்கு தொடர்பாக இந்திய நலவாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்திருந்தார்
அந்த மனுவில், உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி. தரப்பில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனி நபர்கள் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சந்தேகத்துக்கு இடமான வகையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இந்திய நலவாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை.
ஆதலால் இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக ஜூன் 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
அந்த நாளில் இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.