தமிழ்நாடு

சென்னையில் இன்று இரவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

Published On 2024-06-19 05:17 GMT   |   Update On 2024-06-19 06:48 GMT
  • சென்னையில் ஜூன் மாதம் வழக்கமாக பொழியும் மழையை விட 5 மடங்கு அதிக மழை இந்த ஜூனில் பெய்துள்ளது.
  • சென்னையில் இந்த ஜூன் மாதம் மட்டும் 10 நாட்கள் நல்ல மழை பெய்துள்ளது.

சென்னை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.

நேற்று மாலையில் இருந்தே குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இரவு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த காற்றுடன் மழையின் வேகம் அதிகரித்தது.

நேற்று இரவு 11 மணி தாண்டியும் பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.

இந்நிலையில் சென்னையில் இன்று இரவும் நல்ல மழை பெய்யும் என தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

3வது நாளாக இன்று இரவும் சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் ஜூன் மாதம் வழக்கமாக பொழியும் மழையை விட 5 மடங்கு அதிக மழை இந்த மாதம் பெய்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் இதுவரை மட்டும் 10 நாட்கள் நல்ல மழை பெய்துள்ளது.

சென்னையில் ஜூன் சராசரி மழை அளவு 6 செ.மீ தான். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதுவரை 30 செ.மீ. மழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News