தமிழ்நாடு (Tamil Nadu)

2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2023-01-29 08:25 GMT   |   Update On 2023-01-29 08:25 GMT
  • காற்றழுத்த தாழ்வு பகுதி 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
  • ஜனவரி 31, பிப்ரவரி 1-ம் தேதிகளில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பிப்ரவரி 1, 2ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பிப்ரவரி 2ம் தேதி தூத்தூக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மவாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள பகுதியில் சூறாவளி காற்று 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் ஜனவரி 31, பிப்ரவரி 1-ம் தேதிகளில் இந்த பகுதிக்கு செல்லவேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News