ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் - சென்னை மாநகர காவல் ஆணையர்
- ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங்க கொலைக்கான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் ஆணையர் கூறியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். 90% விசாரணை முடிவடைந்துவிட்டது. கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம், முக்கிய நபர்கள் குறித்து காவல்துறை விரைவில் தெரிவிக்கும்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.