தமிழ்நாடு
சென்னையில் 85 சதவீத இடங்களில் செல்போன் சேவை சீரானது- தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா
- தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளனர்.
- 311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
சென்னையில் நாளை மாலைக்குள் தொலைத்தொடர்பு சேவைகள் முழுமையாக சீரடைந்துவிடும் என்றும் வடசென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் எனவும் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா மேலும் கூறியதாவது:-
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழை நீர் வடியத் தொடங்கிவிட்டது. மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற அனைத்து துறை சார்ந்தவர்களும் மீட்பு, நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் 34 குழுக்கள் பணியில் உள்ளனர்.
311 கால்நடை உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.