சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்: மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு
- இன்று சென்னையில் எங்கும் மழை பெய்யவில்லை.
- இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சென்னை:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதனால் இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று எங்கும் மழை பெய்யவில்லை என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இம்மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பைச் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் மழை நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகள் மட்டும் இயங்காது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.