தமிழ்நாடு

கூட்டத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்ற காட்சி.

கட்டுமானங்கள்-பாதுகாப்பை உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்- கார்த்தி சிதம்பரம்

Published On 2023-06-04 05:52 GMT   |   Update On 2023-06-04 05:54 GMT
  • ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
  • உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.

எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News