தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்- சாரல் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2024-08-06 06:20 GMT   |   Update On 2024-08-06 06:20 GMT
  • பாதுகாப்பு கருதி போலீசார் அபாய ஒலியை எழுப்பி குளிப்பதற்கு தடை விதித்தனர்.
  • காலையில் அருவிகளில் தண்ணீரின் சீற்றம் குறைந்தது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில், நேற்று மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக அபாய ஒலியை எழுப்பி அப்புறப்படுத்தி குளிப்பதற்கு தடை விதித்தனர்.

இதனால் ஐந்தருவி மெயின் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

காலையில் குற்றாலம் பகுதியில் லேசான வெயிலுடன் இதமான குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News