தமிழ்நாடு
தமிழகத்தில் சீர்கெட்ட சட்டம்- ஒழுங்கு: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
- தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள்.
- மின்கட்டண உயர்வு உள்ளிட்டவை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.
தமிழகத்தில் சீர்கெட்ட சட்டம்- ஒழுங்கு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து,
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை (04-08-2024) காலை 11 மணிக்கு மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.