தமிழ்நாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2022-07-25 05:41 GMT   |   Update On 2022-07-25 09:38 GMT
  • ஆடி அமாவாசை அன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு.
  • மலைப்பாதைகளில் ஆற்று ஓடைகள் மற்றும் வேறு வழிகளில் செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரித்தனர்.

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்தர்கள் வாழும் மலையாக கருதப்படும் இங்கு அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் வழிபட்டால் சிறப்பு என கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆடி அமாவாசை அன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு. வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று முதல் 30-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று சதுரகிரிக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் இன்று மலைக்கு புறப்பட்டனர். காலை 7 மணிக்கு அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மலைப்பாதைகளில் ஆற்று ஓடைகள் மற்றும் வேறு வழிகளில் செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரித்தனர். மேலும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். ஆடி அமாவாசைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் நாளை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

Tags:    

Similar News