தமிழ்நாடு

குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2024-09-07 09:10 GMT   |   Update On 2024-09-07 09:10 GMT
  • ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
  • மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி, ஓணம் விடுமுறை தினங்களையொட்டி சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி குன்னூரில் இருந்து ஊட்டி வரை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்றும், நாளையும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து அவர்கள் மலை ரெயில்களில் குடும்பத்துடன் பயணித்து வழியோரம் உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளித்து செல்கின்றனர்.

மேலும் கேரளாவின் ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு தலா ஒருமுறை சிறப்பு ரெயிலும், ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு சுற்று ரெயிலும் இயக்கப்பட உள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

இதனால் மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

Tags:    

Similar News