தமிழ்நாடு

கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2024-03-22 07:07 GMT   |   Update On 2024-03-22 07:07 GMT
  • கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது.
  • திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் கைது செய்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சென்டிரலில் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது, மத்திய அரசை கண்டித்தும், கெஜ்ரிவாலை விடுவிக்க கோரியும் திமுகவின் கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News