தமிழ்நாடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சுக்கு அதிக கைத்தட்டல் வந்தது எதற்கு தெரியுமா?- உதயநிதி கலகல பேச்சு

Published On 2024-08-25 16:28 GMT   |   Update On 2024-08-25 16:28 GMT
  • திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.
  • நேற்றைய விழாவில் சுமார் 45 நிமிடங்கள் நமது தலைவர் பற்றியும் , கலைஞர் பற்றியும் ரஜினி பாராட்டி பேசினார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.

இதில், கலந்துக் கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் பேச்சைக் குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கினார்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்றைய விழாவில் சுமார் 45 நிமிடங்கள் நமது தலைவர் பற்றியும் , கலைஞர் பற்றியும் பாராட்டி பேசினார்.

அவர் குறிப்பிட்டு ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

எவ்வளவோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள், சாதித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. இந்தியாவில் மட்டுமல்ல.. உலகத்திலேயே எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு நிகழ்ச்சியை எந்த ஒரு இயக்கமும் இதுவரை நடத்தியதும் இல்லை இனி நடத்தப்போவதும் இல்லை என்று கூறினார்.

அந்த அளவிற்கு திமுக கலைஞர் நூற்றாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி இருக்கிறது. அதற்கு வாழ்த்துகள். இதற்கு காரணம் நம்முடைய கழகத் தலைவர் முதல்வர் மட்டுமல்ல, கழக நிர்வாகிகள் மட்டுமல்ல, முத்தமிழ் டாக்டர் கலைஞரின் உயிரினும் மேலான உடன் பிறப்புகள் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இளைஞர்கள் நம் பக்கம் வர தயாராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

நேற்றைய நிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பேசும்போது எதற்கு அதிக கைத்தட்டல் எழுந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

நான் அதை சொன்னால் மனதில் வைத்துக் கொண்டு பேசிகிறார் என்று நினைத்துக் கொள்வீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News