தமிழ்நாடு (Tamil Nadu)

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை

Published On 2024-10-06 06:24 GMT   |   Update On 2024-10-06 06:25 GMT
  • பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் கர்ப்பபை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
  • கர்ப்பபை கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த வடுகபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கலா. இவர் வயிற்று வலி ஏற்பட்டு மணப்பாறையில் உள்ள காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றர்.

டாக்டர்கள் அவரை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும்மாறு கூறினர்.

அந்த பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் கர்ப்பபை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த கர்ப்பபை கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

இதனிடையே அந்த பெண்ணின் ரத்தத்தின் அளவு 4 எச்.பி. புள்ளி மட்டுமே இருந்துள்ளது. சராசரியாக 10 க்குள் மேல் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை உணர்ந்த மருத்துவக்குழுவினர் இதுதொடர்பாக குடும்பத்தினரிடம் பேசி அந்த பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய தொடர் சிகிச்சை முறைகளை தொடர்ந்தனர்.

மேலும் ரத்ததின் அளவை அதிகரிக்க 4 யூனிட் ரத்தமும் அந்த பெண்ணிற்கு செலுத்தப்பட்டு உடல் நிலையை மேம்படுத்துவதற்கான அனைத்து சிகிச்சை முறைகளும் சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு மீண்டும் ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்ட போது 11 புள்ளிகளை கடந்ததுடன் உடலும் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு தேறி வந்ததை அறிந்து நேற்று அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிட மருத்துவக்குழுவினர் முடிவு செய்தனர்.

அதன்படி தலைமை மருத்துவர் தமிழ்மணி மேற்பார்வையில் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் மஜிதா, விஜயா மயக்கவியல் மருத்துவ நிபுணர் மலைதுரை, அறுவை சிகிச்சை அரங்க செவிலியர்கள் அம்சவள்ளி, ராஜலெட்சுமி, ஜோன் ஆப்ஆர்க் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை தொடங்கினர்.

சில மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப்பின் பெண்ணின் வயிற்றில் இருந்த பிரமாண்ட அளவிலான 5 கிலோ கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்குப்பின் உள்ள மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

குறைந்த அளவு உடலில் ரத்தம் இருந்ததோடு 5 கிலோ எடையுள்ள கட்டி வயிற்றில் இருந்ததால் கடும் அவதிக்கு ஆளாகி வந்த வந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவில் எந்தவித செலவுமின்றி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அசத்தி உள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.

ஏற்கனவே இதுபோன்ற அறுவை சிகிச்சை மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டாலும் கூட 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனித்துவம் பெற்று வருகின்றது.

அரசு மருத்துவமனை என்றால் அலட்சியம் நிறைந்து இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில் பெண்ணுக்கு 5 கிலோ கட்டி கடும் சவாலான நிலையில் அகற்றி இருப்பது தான் சிறந்து வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Tags:    

Similar News