தமிழ்நாடு

வாக்களிக்க பணம் வாங்க வேண்டாம்: நத்தம் பஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் நூதன பிரசாரம்

Published On 2024-04-15 06:33 GMT   |   Update On 2024-04-15 06:33 GMT
  • ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒருநாள் மட்டுமே நமக்கு கொண்டாட்டம்.
  • இந்தியாவில் ஜனநாயக முறைப்படி வாக்களித்து நம்மை ஆள்பவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நத்தம்:

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (45) சமூக ஆர்வலரான இவர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பஸ் நிலையத்தில் நூதன முறையில் கையிலும், கழுத்திலும் விழிப்புணர்வு பதாகைகளை தொங்க விட்டு பிரசாரம் செய்தார். பணம், பொருள் வாங்காமல் வாக்களிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். தியாகிகள் உயிர் கொடுத்து நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்துள்ளனர். எனவே மனசாட்சிபடி வாக்களிப்பது மட்டுமே நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை. ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒருநாள் மட்டுமே நமக்கு கொண்டாட்டம். ஆனால் 5 ஆண்டுகள் திண்டாட்டம். ஜனநாயகத்தை உயர்த்த பணநாயகத்தை வீழ்த்த வேண்டும். வாக்களிக்க பணம், பொருள் வாங்கினால் நாம் வாழ்வை இழப்பதற்கு சமமாகும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பிரசாரம் செய்தார். இறித்து அவர் தெரிவிக்கையில், சுதந்திர இந்தியாவில் பணம் கொடுத்து வாக்களிக்க வைப்பது மிகப்பெரிய கேடாகும். வாக்குரிமை என்பது இன்று பல நாடுகளில் பலருக்கு கிடைக்காத நிலை உள்ளது. அதுபோன்ற நிலையில் இந்தியாவில் ஜனநாயக முறைப்படி வாக்களித்து நம்மை ஆள்பவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஊர்களில் இதுபோன்ற பிரசாரம் செய்து வருவதாக கூறினார்.

Tags:    

Similar News