தமிழ்நாடு

"ஸ்டார் 2.0" அப்டேட் ஆகிறது.. 1950 ஆம் ஆண்டில் இருந்தே கட்டணமின்றி வில்லங்க சான்றுகளை பதிவிறக்கம் செய்யலாம்

Published On 2023-07-26 14:00 GMT   |   Update On 2023-07-26 14:00 GMT
  • 1975 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய பதிவேடு ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
  • 1950 முதல் 1974 வரையிலான பதிவேடுகளை கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்டார்' திட்டம் 2018 முதல் புதிய பரிணாமத்தில் 'ஸ்டார் 2.0' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பதிவுத்துறையில் அனைத்து சேவைகளும் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

1975 ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய அட்டவணை-II பதிவேடு கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை இணையவழியில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இந்த வசதி, 01.01.1950 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க 01.01.1950 முதல் 31.12.1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்கச் சான்றுகளை இணைய வழியில் பொதுமக்கள் பார்வையிடவும் மற்றும் பதிவிறக்கம் செய்ய ஏதுவாகவும் மேற்கண்ட காலத்திற்கான அட்டவணை-II பதிவேட்டினை ரூ.36.58 கோடி மதிப்பீட்டில் கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணி முடிவடைந்தவுடன் 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும், அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும்.

இவ்வாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News