தமிழ்நாடு
"மிச்சாங் புயல்" எதிரொலி- நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.
- நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவரைவு ரெயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்பட 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.