தமிழ்நாடு

மீன்வளத்துறை எச்சரிக்கை எதிரொலி: 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2023-06-07 07:56 GMT   |   Update On 2023-06-07 07:56 GMT
  • பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
  • கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.

நெல்லை:

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலை எச்சரிக்கையின்படி நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற 9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கையின் படி மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.

இதனை அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

Tags:    

Similar News