தமிழ்நாடு

பவானிசாகர் அணையில் 2-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்

Published On 2023-06-21 05:40 GMT   |   Update On 2023-06-21 05:40 GMT
  • மீன்பிடி தொழிலில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வருகிறார்கள்.
  • கடந்த 2 நாட்களாக போராட்டம் காரணமாக மீன்கள் பிடிக்கவில்லை.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மீன்கள் மீன்வளத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது.

மீன்பிடி தொழிலில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் ஒப்பந்த காலம் நேற்று முன்தினம் முடிவடைந்ததது. இதையடுத்து மீன் பிடிக்கும் உரிமையை தங்களுக்கு வழங்க கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தம் தொடங்கினர். இன்று 2-வது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது.

பவானி சாகர் அணையில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தினமும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக போராட்டம் காரணமாக மீன்கள் பிடிக்கவில்லை. எனவே மீன் விலை உயரும் நிலை உருவாகி இருக்கிறது. மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லாததால் நீர்பிடிப்பு பகுதிகளில் கரையோரம் பரிசல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News