தமிழ்நாடு

சென்னையில் பூண்டு விலை ரூ.500 ஆக உயர்வு

Published On 2024-02-04 10:22 GMT   |   Update On 2024-02-04 10:22 GMT
  • மருத்துவ குணம் கொண்ட பூண்டு இல்லாமல் ரசம் உள்பட எந்தவொரு சமையலும் செய்ய முடியாது.
  • மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.

போரூர்:

சமையலுக்கு தினமும் பயன்படுத்தப்படும் பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்கப்படுகிறது, வெளி மார்க்கெட்டில் உள்ள கடை களில் ஒரு கிலோ பூண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உதிரி பூண்டு ஒரு கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது.

மருத்துவ குணம் கொண்ட பூண்டு இல்லாமல் ரசம் உள்பட எந்தவொரு சமையலும் செய்ய முடியாது. உற்பத்தியாளர்களிடம் இருந்து பூண்டுவை அதிகளவில் கொள்முதல் செய்து பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பூண்டுவின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.50-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 10 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பூண்டு உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.

மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், சின்ன வெங்காயம் மற்றும் பச்சை காய்கறிகளான பீன்ஸ், அவரைக்காய், உஜாலா கத்தரிக்காய் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.22-க்கும், சின்ன வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.25-க்கும், உஜாலா கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.15-க்கும், விற்கப்படுகிறது. சீசன் முடிந்து வரத்து குறைந்துள்ளதால் ஊட்டி கேரட் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.65-க்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News