தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்: பட்ஜெட்டில் தகவல்

Published On 2024-02-19 08:35 GMT   |   Update On 2024-02-19 08:35 GMT
  • மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்.

சென்னை:

தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

புதுமைப்பெண் திட்டத்தை விரிவுபடுத்த ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வரும் நிதியாண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை சீரமைக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.7590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். மூன்றாம் பாலினத்தவரின் கல்வி செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்.

பணிபுரியும் மகளிருக்காக கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படும். 15 ஆயிரம் திறன்மிக்க வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News