திமுக எம்.பி., தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை- ஆளுநர் மாளிகை விளக்கம்
- தமிழக அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
- குடும்ப உறுப்பினர்களுக்காக அரசு பணத்தை, ஆளுநர் செலவிடவில்லை.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்த வார்டுகளில் ரூ.52.69 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மேம்பாட்டு பணிகளை திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர், " ஊட்டியில் இருக்கக்கூடிய ஆளுநர் மாளிகையில் அவருடைய மகளுக்கு எந்த அடிப்படைியல் திருணம் நடத்தினார். தமிழக அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ரவி பதில் அளிப்பாரா? என்று கேள்வி
இதற்கு, "பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், " மகள் திருமணத்திற்கு அரசு வாகனத்தை ஆளுநர் பயன்படுத்தவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்காக அரசு பணத்தை, ஆளுநர் செலவிடவில்லை.
ஒவ்வொரு மாதமும் குடும்ப உறுப்பினர்களின் செலவு முழுவதையும் ஆளுநரே ஏற்கிறார்.
ஆளுநரின் விருந்தினர்கள் யாரும், ஆளுநர் மாளிகையில் தங்க வைக்கப்படவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.