null
சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
- ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
- வேப்பம்பாட்டு, திருநின்றவூர், பாட்டபிராம், உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், மதுரவாயல், போரூர், வியாசர்பாடி, பெரம்பூர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதுதவிர திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை, வேப்பம்பாட்டு, திருநின்றவூர், பாட்டபிராம், உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.