தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை- வானிலை மையம்

Published On 2024-10-14 11:40 GMT   |   Update On 2024-10-14 11:40 GMT
  • இந்தாண்டு இயல்பை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு.
  • டெல்டா, கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மெதுவாக நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும்.

பிறகு, வட தமிழ்நாட்டை நோக்கி நகரும். வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்குகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்.

17ம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

டெல்டா, கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று 50 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்தாண்டு இயல்பை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு.

மீனவர்கள் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

கனமழை எச்சரிக்கை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பருவமழையை வழக்கமாக எதிர்கொள்வது போல் எதிர்கொள்ளலாம். அவரவர் பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாடுகளை திட்டமிடலாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News