தமிழ்நாடு

கனமழை எதிரொலி- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

Published On 2024-10-14 12:47 GMT   |   Update On 2024-10-14 12:47 GMT
  • விமான சேவையில் மாற்றல் இருப்பின், உடனடியாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • சமுக வலைத்தளம் வழியாக தகவல்கள் வழங்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மிக அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு, விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி, ஓடுபாதை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் தேங்காதபடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி கூறப்பட்டுள்ளது.

விமான சேவையில் மாற்றல் இருப்பின், உடனடியாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான சேவை குறித்த தகவல்களை, அந்தந்த நிறுவன இணையதளத்தில் உறுதி செய்துகொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான சேவைகளில் பெரிய மாற்றம் இருப்பின் சமுக வலைத்தளம் வழியாக தகவல்கள் வழங்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News