தமிழ்நாடு

அம்பாசமுத்திரம் 8-வது வார்டு கவுன்சிலர் போராட்டம் நடத்த அனுமதி: மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2023-10-05 08:46 GMT   |   Update On 2023-10-05 08:46 GMT
  • எங்கள் பகுதி பொதுமக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன்.
  • சம்பந்தமே இல்லாமல் பல்வேறு திட்டங்களை எங்கள் வார்டில் செயல்படுத்துகிறார்கள்.

மதுரை:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சித்ரா தேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

நான் அம்பாசமுத்திரம் நகராட்சி 8-வது வார்டு சுயேச்சை கவுன்சிலராக உள்ளேன். எங்கள் பகுதி பொதுமக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். எங்கள் வார்டு மக்களின் குறைகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் தொடர்ந்து நகராட்சியிடம் முறையிட்டு வருகிறேன்.

ஆனால் இங்கு உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தருவதில்லை. சம்பந்தமே இல்லாமல் பல்வேறு திட்டங்களை எங்கள் வார்டில் செயல்படுத்துகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை.

இதை சுட்டிக்காட்டி தொடர்ந்து வார்டு மக்களின் நலனுக்காக போராடுகிறேன். எனது கோரிக்கைகள் இதுவரை ஏற்கப்படவில்லை. எனவே எங்கள் வார்டு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்தேன். அவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். நான் திட்டமிட்டபடி நாளை (6-ந்தேதி) போராட்டம் நடத்த அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மனுதாரர் தனது போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News