தமிழ்நாடு

ஓசூர் அருகே பொதுமக்கள் வாந்தி-மயக்கம்

Published On 2024-06-14 04:02 GMT   |   Update On 2024-06-14 04:03 GMT
  • சின்ன எலசகரி அம்பேத்கர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
  • மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரை குடித்த, 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

ஓசூர்:

ஓசூர் அருகே மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீரை குடித்த 15-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சின்ன எலசகரி அம்பேத்கர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரை குடித்த, 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News