நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி கதிரவன் திடீர் மரணம்
- புதிதாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்றிருந்தார்.
- தங்கி இருந்த இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
நாமக்கல்:
சேலம் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு டேன்மேக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்தவர் கதிரவன். சேலம் டேன்மேக் நிறுவனத்தின் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சேலம் டேன்மேக் நிறுவனத்தில் மேலாண் இயக்குனர் பதவிலிருந்து வேறொரு துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இன்று காலை தனது புதிதாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்றிருந்தார். சென்னையில் தங்கி இருந்த இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கதிரவனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரம் ஆகும்.
இது குறித்து தகவல் அறிந்து அவரது உறவினர்கள் சென்னை சென்றனர்.
முதுகலை வேளாண்மை பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை கலெக்டராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார்.
2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார்.
சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார். 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றார். பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக கடந்த 2018--ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.