தமிழ்நாடு (Tamil Nadu)

'நீங்கள் வெறுப்பைக் கக்கினால் தமிழ் நெருப்பைக் கக்கும்' - ஆளுநர் ரவிக்கு கமல் ஹாசன் எச்சரிக்கை

Published On 2024-10-18 16:16 GMT   |   Update On 2024-10-18 16:16 GMT
  • முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
  • உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல்.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்ட 'ஹிந்தி மாத' நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்வின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.அந்த வகையில் மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் இந்த விவகாரம் குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் , திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது.

அரசியல் செய்வதாக நினைத்து "திராவிட நல்திருநாடு" எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்! எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News