தமிழ்நாடு

ஐடி ரெய்டு- அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு - கரூரில் பரபரப்பு!

Published On 2023-05-26 03:07 GMT   |   Update On 2023-05-26 04:39 GMT
  • தமிழ் நாட்டின் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
  • அரசு ஒப்பந்ததார்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுக்க 40-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக், மின்துறை தொடர்பான அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ் நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தின் கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் சில ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். திமுக தொண்டர்களில் ஒருவரை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News