குளிர்ப்பந்தலில் குடும்ப அரசு.. கொடும் வெயிலில் மக்கள் - ஜெயக்குமார் விமர்சனம்
- குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை.
- இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியை லட்சக்கணக்கில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த மக்கள் மீண்டும் வீடு திரும்பும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சி குறித்து ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.
குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை.
முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.
இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது.
நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.