தமிழ்நாடு

காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து பால் வடியும் அதிசயம்- பக்தர்கள் வியந்து தரிசனம்

Published On 2024-01-06 07:14 GMT   |   Update On 2024-01-06 07:14 GMT
  • காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது.
  • தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தை சி.ஆர்.சி டெப்போ அருகில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் முனீஸ்வரர், நாகம்மன் சன்னதிகளும் பரிவார தெய்வங்களாக உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது.

இந்நிலையில் இந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் பால் வடிந்தது. தொடர்ந்து இடைவிடாமல் பால் வடிந்து வருகிறது.

தகவல் அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டு வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை கண்டு வியந்து தரிசனம் செய்து வருகின்றனர். பலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.

இது பற்றி பக்தர்கள் கூறும்போது, காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது. தற்போது 3 இடங்களில் வடிந்து ஓடி கொண்டிருக்கிறது என்றனர்.

தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது. 

Tags:    

Similar News