தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி வழக்கு- 36 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு
- சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 6க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பினர்
- தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். கலவரத்தை தூண்டும் வகையிலான பதிவுகள், குறிப்பிட்ட ஒரு நபர் மீது உள்நோக்கத்தோடு கருத்துக்கள் மற்றும் வீடியோ வெளியிடுவது, வதந்திகளை பரப்புவது என இருந்த 36 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 6க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.