தமிழ்நாடு
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணி- ஒப்பந்தம் வெளியீடு
- ரூ.20.29 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை வரும் 22-ந்தேதி 2.30 மணி முதல் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை:
நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20.29 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சேவை கட்டடம், எஸ்எஸ்எல்வி ஏவுதள மையம் உள்ளிட்டவைகளுக்கான கட்டுமான பணி ஒப்பந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை வரும் 22-ந்தேதி 2.30 மணி முதல் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.